பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

0 1555
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாயுடன் சேர்த்து பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளருக்கு அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அந்த திட்டத்தை துவக்கி வைத்ததன் அடையாளமாக 9 பயனாளிகளுக்கு 2500 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி உள்ளிட்ட பொருட்களை முதலமைச்சர் வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments