குஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்

0 1131

குஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று காலமான மார்ச் முதல் டிசம்பர் வரை முகக்கவசம் அணியாமல் இருந்தல், பொது இடங்களில் எச்சில் உமிழ்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டதாக 21 லட்சத்து 40 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடமிருந்து 93 கோடியே 56 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments