ஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு

0 2910
ஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூர் நகரில் மக்கள், திடீரென தலை சுற்றி மயங்கி கீழே விழுவதாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு மூன்று பேர் சனிக்கிழமை 10 பேர் என இதுவரை, 200க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வலிப்பு நோய் வந்தது போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றது. ஏலூர் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் எல்லாம் நிரம்பி வரண்டாவில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

நோயாளிகளில் பலர் விந்தையான குரலில் கத்துவதாக கூறப்படும் தகவலும், அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கவலைக்கிடமானவர்கள் விஜயவாடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments