எட்டு மாதமாக மூடப்பட்டிருந்த சிலி விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பு

0 629
எட்டு மாதமாக மூடப்பட்டிருந்த சிலி விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பு

கொரோனாத் தொற்று காரணமாக,கடந்த எட்டு மாதமாக மூடப்பட்டிருந்த, சிலி விமான நிலையம்,கடுமையான கட்டுப்பாடு விதிகளுக்கு இடையே, சுற்றுலாப்பயணிகள் வருகைக்காக திறக்கப்பட்டுள்ளன.

இங்கு வரும் பயணிகள்,அண்மையில் எடுத்த கொரோனா பரிசோதனைச் சான்று, மருத்துவக் காப்பீடு சான்று போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என விமான நிலைய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இரண்டு வார கண்காணிப்பிற்காக, தங்கும் இடம்,உடல்நிலைக் குறித்தும் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments