நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை வெளியிடுவதில் தொடர்ந்து இழுபறி? மாஸ்டர் படத்திற்கான சம்பளத்தை விஜய் குறைக்க வேண்டும் என கோரிக்கை?

0 2885
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை வெளியிடுவதில் தொடர்ந்து இழுபறி? மாஸ்டர் படத்திற்கான சம்பளத்தை விஜய் குறைக்க வேண்டும் என கோரிக்கை?

மாஸ்டர் படத்தை வெளியிடுவதற்கான சிக்கல் நீடித்து வரும் நிலையில், அந்த படத்திற்கு விஜய் பெற்றுக்கொண்ட சம்பளத்தின் ஒரு பாதியை குறைக்க விநியேகஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளுக்கு பொதுமக்கள் வருகை குறைந்துள்ளதால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட தொகைக்கு மாஸ்டர் படத்தை வெளியிட மறுப்பு தெரிவிக்கும் விநியோகஸ்தர்கள், படத்தை பாதி விலைக்கு கேட்பதாக கூறப்படுகிறது. இதானால், அதிர்ச்சியடைந்துள்ள படக்குழு, விநியோகஸ்தர்கள் கொடுத்த முன் பணத்தை வட்டியுடன் ஷெட்டில் செய்துவிட்டு, ஓ.டி.டி.யில் வெளியிடலாம் என முடிவெடுத்தது.

ஆனால், அதற்கு விஜய் ஒப்புக்கொள்ளாததால், மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்திற்காக நடிகர் விஜய் பெற்றுக்கொண்ட 80 கோடி ரூபாய் சம்பளத்தில் இருந்து ஒரு பாதியை குறைத்துக்கொண்டால், யாருக்கும் நஷ்டமுமின்றி, படத்தை திரையிடலாம் என வினியேகஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments