சிவசேனா எம்எல்ஏ மீது அமலாக்கத்துறை நடவடிக்கை... மத்திய பாஜக அரசுக்கு உத்தவ் தாக்கரே பகிரங்க எச்சரிக்கை

சிவசேனா எம்எல்ஏ மீது அமலாக்கத்துறை நடவடிக்கை... மத்திய பாஜக அரசுக்கு உத்தவ் தாக்கரே பகிரங்க எச்சரிக்கை
சிவசேனா எம்எல்ஏ பிரதாப் சர்நாயக் மற்றும் அவரது மகன் மீது அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையால் ஆத்திரமடைந்துள்ள மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மத்திய அரசுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
கட்சி பத்திரிகையான சாம்னாவுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசில் உள்ளவர்கள், தங்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளனர் என்பதை நினைவில் கொண்டால் நல்லது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட எம்எல்ஏவின் குடும்பம் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக அவர் கூறினார்.
கட்டிட வடிவமைப்பாளர் அன்வாய் நாயக்கை தற்கொலைக்கு தூண்டியதாக ஒரு தனியார் டிவி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியவர் எம்எல்ஏ பிரதாப் சர்நாயக் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments