தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
நடப்பு மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன், நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் இன்று வரையிலான கால கட்டத்தில் தமிழகத்தின் இயல்பு சராசரி மழை அளவு 34 செ.மீட்டர் என்றார்.
ஆனால் இதுவரை 29 செ.மீட்டர் அளவுக்கே மழை பெய்துள்ளது என்ற அவர், இது 15 சதவிகிதம் குறைவு என்றார். மேலும் தமிழகத்தை நோக்கி வடதிசை காற்று வீசுவதாகவும், புயல் கரையை கடந்துள்ளதால் நிலப்பரப்பிலும் காற்று வீசுவதாகவும், இதனால் குளிர் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments