காலமானார் நடிகர் தவசி..!

0 52916
புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார்

ணவுக்குழாய் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் தவசி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் முத்திரை பதித்தவர் தவசி.

முரட்டு மீசையுடன் கம்பீர தோற்றத்துடன் இருந்த அவர், உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்று நோயின் தாக்கத்தால் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயிருந்தார்.

அவரது துயர நிலை குறித்து அண்மையில் வீடியோ வெளியிட்டு நிதி உதவி கோரியிருந்தார். அதனைப் பார்த்து நடிகர்கள் சிலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, சிகிச்சைக்காக நிதி உதவியும் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தவசி உயிரிழந்து விட்டதாக மதுரை தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments