அமெரிக்காவில் பர்கர் வாங்க 12 மணி நேரம் காத்திருந்த வாடிக்கையாளர் கூட்டம்..!

0 6231
அமெரிக்காவில் பர்கர் வாங்க 12 மணி நேரம் காத்திருந்த வாடிக்கையாளர் கூட்டம்

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பர்கர் உணவை வாங்குவதற்காக கார்களில் 12 மணி நேரம் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

Auroa பகுதியில் "In-N-Out" என்ற பர்கர் கடை கடந்த 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த கடையில் தயாரிக்கப்படும் பர்கர் சுவை மிகுந்ததாக இருந்ததால் நாள்தோறும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகி வந்தது. இந்த நிலையில் இந்த கடை மூடப்படுவதாக அதன் வெப்சைட்டில் தகவல் வெளியானதை அடுத்து அங்கு வாடிக்கையாளர்கள் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.

இதன் காரணமாக கார்களின் அணிவகுப்பு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டிருந்தது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments