7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி... டாக்டரான நெசவுத் தொழிலாளியின் மகன்…

0 1089

கும்பகோணம் அருகே திருபுவனத்தை சேர்ந்த நெசவுத் தொழிலாளியின் மகன் விக்னேஷ். தமிழக அரசு ஒதுக்கீடு செய்த அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இவருக்கு இடம் கிடைத்துள்ளது.  

மருத்துவராக வேண்டும் என்ற தமிழக மாணவ, மாணவியர்களின்  கனவுக்கு முட்டுக்கட்டை போட்ட நீட் தேர்வு. மேலும் பெரும்பலான அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டா கனியாகவே மாறியது.

தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், மத்திய அரசு விடாப்பிடியாக மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு முக்கியம் என தெரிவித்தது.

இந்நிலையில், தமிழக மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியது.

அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த சலுகை வரப்பிரசாதமாக அமைந்தது.

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் நெசவுத் தொழிலாளியான ஜெயக்குமாரின் மகனான விக்னேஷ் முதல் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை அரசு பள்ளியில் பயின்றார், மருத்துவராக வேண்டும் என்ற கனவில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய விக்னேஷ், 138 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றாலும் அரசு  மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

”முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்ற முதுமொழிக்கு ஏற்ப வீட்டிலிருந்தவாறே மீண்டும் நீட் தேர்வுக்கு தயார் ஆனார் விக்னேஷ். இதற்க்கு அவரது பள்ளி ஆசிரியர்கள் பெரிதும் உதவி செய்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் சேரும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு  விக்னேஷ்க்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்தது.

இவ்வருடம் மீண்டும் நீட் தேர்வு எழுதிய விக்னேஷ், 398 மதிப்பெண் பெற்று தேர்வானார். தமிழக அரசு அறிவித்த  இட ஒதுக்கீட்டின் கீழ் இவருக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

அரசி வழங்கிய இட ஒதுக்கீட்டினாள் தான் தனக்கு இடம் கிடைத்தது என்ரூ மகிழ்ச்சியுடன் விக்னேஷ் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments