சபரிமலைக்கு வரும் கடைசி பக்தரும் தரிசனம் செய்துவிட்டு திரும்புகிறாரா என்பதை உறுதிசெய்ய நடவடிக்கை

சபரிமலைக்கு வரும் கடைசி பக்தரும் தரிசனம் செய்துவிட்டு திரும்புகிறாரா என்பதை உறுதிசெய்ய நடவடிக்கை
சபரிமலைக்கு ஒவ்வொரு நாளும் வரும் கடைசி பக்தரும் தரிசனம் செய்துவிட்டு திரும்புகிறாரா என்பதை உறுதி செய்ய கண்காணிப்பு காமிரா மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மண்டல கால பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது பக்தர்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் தினமும் அதிகாலை 3 மணிக்கு பின்னரே பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இரவு 7 மணிக்கு பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments