கரும்புத் தின்ன வந்து மாட்டிக்கிட்ட குட்டி யானை...மின்கம்பத்திற்கு பின்னால் ஒளிந்த சுட்டித்தனமான செயல்....வைரல் புகைப்படம்

0 2566
கரும்புத் தின்ன வந்து மாட்டிக்கிட்ட குட்டி யானை...மின்கம்பத்திற்கு பின்னால் ஒளிந்த சுட்டித்தனமான செயல்....வைரல் புகைப்படம்

தாய்லாந்து நாட்டில் கரும்புகளை தின்னும் ஆசையில் தோட்டத்திற்குள் புகுந்த யானைக்குட்டி சிக்கிக் கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் மின்கம்பத்திற்கு பின்னால் ஒளிந்த செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வடக்கு தாய்லாந்தின் சியாங் மாய் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் யானைக்குட்டி ஒன்று  கரும்பை சுவைக்க ஆசைப்பட்டு தனியாக வந்துள்ளது.

அப்போது தோட்டத்திற்குள் இருந்த காவலர்கள் டார்ச் லைட்டோடு ஓடி வந்ததைக் கண்ட  குட்டி யானை அங்கிருந்த மின்கம்பம் ஒன்றின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டு அசையாமல் நின்றது.

இந்த காட்சியை புகைப்படம் எடுத்த காவலர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட யானைக்குட்டியின் சுட்டித்தனமான இந்த செயல் பலரது இதயங்களை கொள்ளை கொண்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments