சுறுங்கிய அணையால் மழை நீர் வீணாக கடலில் கலக்கின்றது..!

0 2166
சுறுங்கிய அணையால் மழை நீர் வீணாக கடலில் கலக்கின்றது..!

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றானில் 12 அடி உயர அணையில், 6 அடி உயரத்திற்கு மண்சேர்த்து சீமைக்கருவேலமரங்கள் சேர்ந்துக் கொண்டதால் அணை நிரம்பி நீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கயத்தார், கழுகுமலை, கடம்பூர் ஆகிய பகுதிகளில் பெய்த மழை நீர் எப்பொதும்வென்றான ஆதனூர் வழியாக வேப்பலோடை அருகே கடலில் கலந்து வந்தது.

மழை நீர் வீணாக கடலுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று எப்போதும்வென்றான் கிராமப் பொதுமக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்ததன் விளையாக, வறண்ட ஓட்டப்பிடாரம் பகுதியை வளமாக்கும் வகையிலும் மழை நீரை தேக்கி வைக்கும் வகையிலும், தமிழக அரசு கடந்த 1976-ம் ஆண்டு எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தை அமைத்தது.

இதனால் கடலுக்குச் சென்ற நீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் மூலம் எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆயிரகணக்கான ஏக்கர் பரப்பு நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதி 465.93 ஏக்கர் ஆகும். 12 அடி உயரம் கொண்ட இந்த நீர் தேக்கம் ஒரு முறை நிரம்பினால் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். ஆனால் காலபோக்கில் இந்த நீர் தேக்கத்தினை முறையாக தூர் வாரததால் மண்ணும் கருவேலமரங்களும் சூழ்ந்து உயரம் 6 அடியாக குறைந்தது.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையில் இந்த நீர்தேக்கம் நிரம்பி உள்ளது. ஆனால் தூர்வாரததால், தற்போது நிரம்பிய தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த அணையைத் தூர்வார வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என குற்றம் சாட்டிய விவசாயிகள் அடுத்த ஆண்டாவது இந்த அணையை முழுமையாக தூர்வாரி கரையை பலப்படுத்தி தர வேண்டும் என்றும், அணைக்கட்டில் உள்ள கால்வாயை சீரமைத்து கொடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே போல கட்டாற்று வெள்ளத்தால் வாலசசமுத்திரம், வெங்கடாசலபுரம், பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.மழைக்காலங்களில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடி வருவதால் 11 கிராம மக்கள், ஊருக்குள் இருந்து மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்கு கூட வெளியே செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு உயர்மட்ட பாலம் கட்டித்த ரவலியுறுத்தி அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்..!

ஒரு டி.எம்.சி நீருக்காக அண்டை மா நிலத்திடம் கையேந்தி நின்றதை மறந்து விடாமல், மா நிலத்தில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளை வருகின்ற கோடை காலத்தில் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments