கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்கி விரட்டியது இலங்கை கடற்படை

0 953
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வலைகளை அறுத்து எறிந்து விரட்டியடித்தனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வலைகளை அறுத்து எறிந்து விரட்டியடித்தனர்.

ராமேசுவரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் ஆயிரத்து 500 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் 50 பேர் 6 பெரிய ரோந்து படகுகளில் வந்தனர்.

அவர்கள் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தி, வலைகளை அறுத்து எறிந்து மீனவர்களை விரட்டியடித்தனர். இதனைத் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர்.

இலங்கை கடற்படை தாக்குதலால் நூற்றுக்கு மேற்பட்ட படகுகளுக்கு தலா 20,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments