பொங்கலுக்கு ஒட்டு மொத்தமாக வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்

0 4513
பொங்கலுக்கு ஒட்டு மொத்தமாக வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்

கொரோனா பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்ததை அடுத்து பொங்கலுக்கு நடிகர்கள் விஜய், தனுஷ், சிம்பு, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்த திரைப்படங்கள் ஒட்டு மொத்தமாக வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தினர், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் கியூப் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சு வார்தையில் வி.பி.எஃப் கட்டணம் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, வரும் பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன், தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம், சசிகுமாரின் எம்.ஜி.ஆர் மகன் உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments