சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசின் ஒப்புதல் அவசியம் - உச்சநீதிமன்றம்

0 2300
சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசின் ஒப்புதல் அவசியம் - உச்சநீதிமன்றம்

வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மாநில அரசின் ஒப்புதல் அவசியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாஜக அல்லாத கேரளா, மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் சிபிஐ விசாரணைக்கான ஒப்புதலை அளிக்கவில்லை.

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் சிபிஐயை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியிருந்தார்.

இத்தகைய சூழ்நிலையில் டெல்லி சிறப்பு காவல் படை சட்டம் தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, சிபிஐ விசாரணைக்கு மாநில அரசுகளின் ஒப்புதல் கட்டாயம் என தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments