இளம் பெண்ணை கேலி செய்தவர்களை விசாரிக்கச் சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்.. திமுக பிரமுகர் உட்பட 4 பேர் கைது

0 5092
இளம் பெண்ணை கேலி செய்தவர்களை விசாரிக்கச் சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்.. திமுக பிரமுகர் உட்பட 4 பேர் கைது

சென்னை கொடுங்கையூரில் இளம் பெண்ணை கேலி செய்து தாக்கியதாக 2 இளைஞர்களையும், அவர்களை விசாரணைக்கு அழைத்து செல்ல விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாக திமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சீனிவாச பெருமாள் கோயில் தெருவில் இளம் பெண் ஒருவர் புடவை அணிந்து நேற்று நடந்து சென்றபோது கல்லூரி மாணவர் ஆகாஷ், உறவினர் வெங்கடசன் கேலி செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இதை தட்டிக்கேட்ட தாயாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. புகாரின்பேரில் 2 பேரை விசாரணைக்கு அழைத்து செல்ல எஸ்.ஐ. சிவசங்கரன் உள்ளிட்ட 2 போலீசார் வந்தபோது அவர்களிடம் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, ஆகாஷ், வெங்கடேசன், ஆகாசின் தந்தை சிற்றரசு, சிற்றரசின் சகோதரரும் வெங்கடேசனின் தந்தையுமான மோகன், இன்னொரு சகோதரரும் திமுக வட்ட பொருளாளருமான அமுல்ராஜ், உறவினர் சதாசிவத்தை கைது செய்து அழைத்து சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments