மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு.. கார்த்திகை 1ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி..!

0 1474
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

மாலை 5 மணிக்கு மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். நாளை கார்த்திகை 1 ஆம் தேதி முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26-ந் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதியும் நடைபெறும்.  ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொரோனா இல்லை என்னும் மருத்துவ சான்றிதழோடு வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

தினசரி 1000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல மகர விளக்கு நாட்களில் 5 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம்  தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments