விலை உயர்ந்த கைக்கடிகாரங்களைக் கொண்டு வந்ததால் சிக்கினார் குருணால் பாண்டியா

0 9957
வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த கைக்கடிகாரங்களைக் அனுமதி இன்றி கொண்டு வந்ததாக கிரிக்கெட் வீரர் குருணால் பாண்டியாவைப் பிடித்த வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் அவரை மும்பை விமான நிலையச் சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.

வியாழனன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்தவர்களிடம் தங்கம், வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் உள்ளனவா என வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தினர்.

ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய கிரிக்கெட் வீரர் குருணால் பாண்டியாவையும் சோதனையிட்டனர். அவரிடம் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் இருந்ததைக் கண்டறிந்த அவர்கள், இந்த வழக்கை விமான நிலையச் சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments