கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வெங்காயம் விலை ரூ.40ஆக குறைந்தது.!

0 2446
கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வெங்காயம் விலை ரூ.40ஆக குறைந்தது.!

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில், வெங்காயம் விலை கிலோ 40 ரூபாயாக குறைந்துள்ளது.

அண்மையில், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 120 ரூபாய் வரையில் விற்பனையானது. இதையடுத்து, எகிப்து, ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டன. மேலும், மத்திய தொகுப்பில் இருந்து வெங்காயம் பெறப்பட்டு, தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்று, கோயம்பேடு காய்கறிச் சந்தையில், பெரிய வெங்காயத்தின் விற்பனை விலை, 40 ரூபாயாக குறைந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி காரணமாகவும், வேறு வழியே இன்றி, உள்நாட்டில் பதுக்கப்பட்ட வெங்காயம் திடீரென சந்தைக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாலும், விலை குறைந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments