தியாகிகள் ஓய்வூதியத்திற்காக 99 வயது சுதந்திர போராட்ட வீரரின் கோரிக்கை, நவம்பர் 26ஆம் தேதிக்குள் தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

0 734

தியாகிகள் ஓய்வூதியம் கோரிய 99 வயது சுதந்திர போராட்ட வீரரின்  கோரிக்கை பற்றி  முடிவெடுத்து, நவம்பர் 26 ஆம் தேதிக்குள் தெரிவிக்க தமிழக அரசுக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 99 வயது சுதந்திர போராட்ட வீரர் கஃபூர்,  ஓய்வூதியம் கேட்டு தாக்கல் செய்த மனு 23 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

விசாரணையில் மனுதாரரின் பிறந்த தேதியிலும், சக கைதிகளின் சான்றுகளிலும் குறைபாடுகள் இருந்ததால், கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தியாகிகள் ஓய்வூதியத்திற்காக  99 வயது முதியவரை, நீதிமன்றத்தை நாட செய்த செயலற்ற தன்மைக்காக,  அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். 

வயது சான்றாக மனுதாரர் ஆதார் அட்டையை சமர்ப்பித்துள்ளதாகவும், சக கைதி கண்ணன் என்பவர் அளித்த சான்றில் தட்டச்சு குறைபாடு மட்டுமே உள்ளதால், இந்த ஆவணங்களின் அடிப்படையில் பென்ஷன் வழங்குவது குறித்து  முடிவெடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments