பீகார் மாநிலத்தில் 7 வது முறையாக முதலமைச்சராகிறார் நிதீஷ்குமார்..!

0 2469
பீகார் மாநிலத்தில் 7 வது முறையாக நிதீஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

பீகார் மாநிலத்தில் 7 வது முறையாக நிதீஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதி முதல் முறையாக அவர் பீகார் மாநில முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஒரு வாரத்தில் பதவி விலகினார்.

2005 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி பா.ஜ.க. துணையுடன் இரண்டாம் முறையாக முதலமைச்சராக அவர் பதவி ஏற்றார். 2010 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி 3 வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார்.

2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி அவர் 4 ஆம் முறையாக முதலமைச்சர் ஆனார். 2015 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி 6 வது முறையாக முதலமைச்சராக அவர், இப்போது 7 வது முறையாக முதலமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments