தூத்துக்குடியில் ரூ.328 கோடியில் 29 புதிய திட்டங்கள்.. முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்..!

0 2145
தூத்துக்குடி மாவட்டத்தில் 328 கோடி ரூபாய் மதிப்பிலான 29 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 328 கோடி ரூபாய் மதிப்பிலான 29 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 22 கோடியே 38 லட்சம் மதிப்பில் செயல்படுத்தி முடிக்கப்பட்ட 16 பணிகளை துவக்கி வைத்த அவர், 37 கோடியே 55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

ரவுடிகளால் குண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியத்தின் மனைவி புவனேஸ்வரியிடம் அரசு பள்ளி வேலைவாய்ப்பு ஆணையையும், 50 லட்ச ரூபாய் காசோலையையும் முதலமைச்சர் வழங்கினார்.

முன்னதாக, தூத்துக்குடி அரசு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கு 16-கோடி ரூபாயில் வாங்கப்பட்டுள்ள புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் லீனியர் ஆக்சிலெரட்டேர் (Linear Accelerator) கருவியை தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments