இருசக்கர வாகனம் மீது லாரி உரசியதால் கீழே விழுந்த தம்பதி; கணவன் கண்முன்னே உடல் நசுங்கி மனைவி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி உரசியதால் கீழே விழுந்த தம்பதி; கணவன் கண்முன்னே உடல் நசுங்கி மனைவி உயிரிழப்பு
நெல்லையில் லாரி உரசியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி தம்பதி கீழே விழுந்த நிலையில், பின் சக்கரம் ஏறி கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்ததன் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி கேமராக் காட்சி வெளியாகி உள்ளது.
கீழநத்தத்தைச் சேர்ந்த கோயில் பூசாரி பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி சாந்தி இருசக்கர வாகனத்தில் நெல்லைக்கு சென்றுக் கொண்டிருந்த போது ஸ்ரீபுரம் அருகே அரிசி லோடு ஏற்றிச் சென்ற லாரி, அவர்களின் இருசக்கர வாகனத்திற்கு பக்கவாட்டில் வந்துள்ளது.
அப்போது லாரி இருசக்கர வாகனத்தை உரசியதாலும் மழை காரணமாக சாலை ஈரமாக இருந்ததாலும் நிலைதடுமாறி தம்பதி இருவரும் கீழே விழுந்தனர். இதில் லாரியின் பின் சக்கரம், சாந்தியின் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி கணவர் கண்முன்னே உயிரிழந்தார்.
Comments