அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை டிசம்பர் 17-தேதிக்கு ஒத்திவைப்பு

0 1346

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை, டிசம்பர் 17ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ராஜபாளையத்தில் 35 ஏக்கர் நிலம், திருத்தங்கல் பகுதியில் 2 வீட்டு மனைகள், 75 சென்ட் நிலம் வாங்கிய ராஜேந்திர பாலாஜி, அவற்றின் அசல் சந்தை மதிப்பு 7 கோடி ரூபாய்க்கு பதிலாக, வெறும் 1 கோடியே 15 லட்சத்துக்கு வாங்கியுள்ளதாக கணக்கு காட்டியதாக மனுதாரர் புகார் கூறியிருந்தார்.

திருத்தங்கல் பேரூராட்சி தலைவராக இருந்த காலம் முதல் தற்போது வரை அவரின் வருமானம் மற்றும் சொத்துகள் பற்றி விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

நீதிமன்ற வழக்கறிஞர் அறைகள் பூட்டப்பட்டுள்ள நிலையில், வழக்கு ஆவணங்கள் அங்கு சிக்கியுள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க, ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியம் கோரினார்.

இதை ஏற்று வழக்கு விசாரணை டிசம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments