மேனகா அத்தியாயம் 4..! கொலை.. கொலையா செஞ்சிருக்கா..!

0 6472
மேனகா அத்தியாயம் 4..! கொலை.. கொலையா செஞ்சிருக்கா..!

சென்னை அருகே கணவரின் குடும்ப சொத்துக்காக தனது தந்தையுடன் சேர்ந்து மாமனார், கணவர், கணவரின் தம்பி ஆகிய 3 பேரை அடுத்தடுத்து கொலை செய்து புதைத்த மேனகா என்ற சீரியல் கில்லரை போலீசார் தேடி வருகின்றனர். காவல்துறையினரால் கிடப்பில் போடப்பட்ட மாயமான வழக்கு கொலை வழக்கான திகில் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. 

அத்தியாயம் ஒன்று..!

சென்னை படப்பை அடுத்த நரியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுப்பராயன் பத்மினி தம்பதியருக்கு செந்தில்குமார், ராஜ்குமார் ஆகிய இரு மகன்கள் இருந்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பலகோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துக்களை இருமகன்களுக்கும் சமமாக பங்கிட்டு கொடுத்த நிலையில், தனக்கு கொடுக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு குறைவாக இருப்பதாக கூறி தனது சகோதரர் ராஜ்குமாரை, செந்தில் குமார் கொலை செய்துள்ளார். இந்த கொலைவழக்கில் செந்தில்குமாரும் அவரது கார் ஓட்டுனர் ராஜேஷ் கண்ணாவும் கைது செய்யப்பட்டனர். சொத்து பிரச்சனையை தூண்டிவிட்ட மனைவி மேனகா தப்பிவிட்டார். அந்த வழக்கை விசாரித்த போலீசார் இதன் பின்னணியில் உள்ளது யார் என்பதை கவனிக்க தவறிவிட்டனர்..!

அத்தியாயம் இரண்டு..!

முதலில் ஜாமீனில் வந்த ஓட்டுனர் ராஜேஷ் கண்ணாவுக்கு , செந்தில்குமாரின் மனைவி மேனகாவுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மேனகாவின் கணவர் செந்தில்குமார் திடீரென்று மாயமானார். அப்போது மாமனார் சுப்பராயன் உயிரோடு இருக்கும் வரை சொத்து தனக்கு கிடைக்காது என்று சொன்ன மேனகாவின் வார்த்தைகளை நம்பி, மேனகாவின் தந்தை அருணுடன் சேர்ந்து ராஜேஷ் கண்ணா , செந்தில்குமாரின் தந்தை சுப்பராயனை 2018 ஆம் ஆண்டு கொலை செய்து புதைத்துள்ளார். இந்த வழக்கில் போலீசார் ராஜேஷ் கண்ணாவை மட்டும் கைது செய்தனர். அவரும் சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார்

அத்தியாயம் மூன்று..!

மாயமான செந்தில்குமாரை பற்றி மேனகா கவலைப்படாத நிலையில் தனது மகனை காணவில்லை என அவரது தாய் பத்மினி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரை கண்டுகொள்ளாத நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பத்மினியை கடத்திச்சென்று சொத்துக்களை தங்களை பெயருக்கு மாற்ற முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முதன் முறையான மருமகள் மேனகாவை அயனாவரம் போலீசார் கைது செய்தனர்.

அந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் கண்ணாவை நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் கள்ளக்குறிச்சியில் கைது செய்தனர் காவல்துறையினர்,
கடத்தல் வழக்கில் மேனகா, தந்தை அருண் ஜாமீனில் வெளியில் வந்துவிட இரு கொலை வழக்கு மற்றும் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் கண்ணா மட்டும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டான். முன்னதாக மாயமான கணவர் குறித்து விசாரித்த போது மேனகா காவல் ஆய்வாளர் நடராஜன் மீதே பாலியல் புகார் தெரிவித்ததால் அவரிடம் தொடர்ந்து விசாரிக்க போலீசார் தயங்கினர்.

அத்தியாயம் நான்கு..!

இந்த நிலையில் தனது மகனை கண்டுபிடித்து தரக்கோரி தாய் பத்மினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதையடுத்து செந்தில்குமாரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த நீதிமன்றம் மணிமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து செந்தில் குமார் மாயமான வழக்கை தூசி தட்டிய போலீசார் மேனகாவின் செல்போன் தொடர்புகளை வைத்து அவருக்கும் ஓட்டுனர் ராகேஷ் கண்ணாவுக்குமான தொடர்பை கண்டுபிடித்தனர்.

மேனகா மாயமான நிலையில் அவரது தந்தை அருணை பிடித்து விசாரித்த போது தனது மகள் மேனகாவின் உத்தரவின் பேரில் சொத்துக்களை முழுவதுமாக எடுத்துக் கொள்ளும் பேராசையில் 2018 ஆம் ஆண்டு மருமகன் செந்தில்குமாரை செஞ்சி அருகே பசுமலை தாங்கல் கிராமத்திற்கு அழைத்துச்சென்று மது ஊற்றிக்கொடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்து உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதைத்து வைத்திருப்பதாக கூறி திகிலூட்டினார். தனது மகளின் காதலன் கார் ஓட்டுனர் ராஜேஷ் கண்ணா, கூட்டாளிகள் அரிகிருஷ்ணன், காசி நாதன் ஆகியோர் தனக்கு உடந்தையாக இருந்ததாக கூறி புதைத்த இடத்தையும் அடையாளம் காட்டினார்

அங்கிருந்து சடலத்தின் எலும்புகளை தோண்டி எடுத்த போலீசார் அவற்றை தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேனகாவின் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆரம்பத்தில் மேனாகாவின் பாலியல் புகார் காரணமாக அவரிடம் முறையாக விசாரிக்க இயலவில்லை என சுட்டிக்காட்டும் போலீசார் தலைமறைவான சீரியல் கில்லர் மேனகாவை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

எந்த சொத்துக்களுக்காக இத்தனை குற்றச்சாம்பவங்கள் நடத்தப்பட்டதோ அந்த சொத்துக்கள் அப்படியே இருக்கின்றது..! அதற்காக அடித்துக் கொண்டவர்கள் தான் வாழ்வை அழித்துக் கொண்டும், ஓடிக் கொண்டும் இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments