மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு... அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!

0 1005
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு... அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ஏழரை சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், இடஒதுக்கீட்டுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் குறைந்த அளவிலேயே வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைப்படி, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்து.

இதன் மூலம், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவ படிப்பில் சேர முடியும். ஆனால், மசோதாவுக்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், விரைவில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற இருப்பதால், 162 வது சட்டப்பிரிவின் கீழ் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதியே அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும், இந்த அரசாணையை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த இடஒதுக்கீட்டை 10 சதவீதம் அளவிற்கு உயர்த்த வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments