மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவராக வி.எம்.கடோச் நியமனம்

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதுச்சேரி ஜிப்மர் தலைவர் டாக்டர் வி.எம்.கடோச் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதுச்சேரி ஜிப்மர் தலைவர் டாக்டர் வி.எம்.கடோச் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர், மத்திய அரசு சுகாதாரப்பணிகள் தலைமை இயக்குநர், சுகாதார அமைச்சக கூடுதல் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 17 உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ள நிலையில் தற்போது 13 பேரின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments