திமுக கிழக்கு மண்டல நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

0 1068
திமுக கிழக்கு மண்டல நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் விதமாக திமுக கிழக்கு மண்டல நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 110 திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாலை நடைபெறும் கூட்டத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இன்றுடன் 3 மண்டல நிர்வாகிகள் கூட்டம் நிறைவு பெற உள்ள நிலையில், நாளை வடக்கு மண்டலத்திற்கான கலந்துரையாடல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments