15 நிமிடத்தில் லடாக் எல்லை பிரச்சனைக்கு தீர்வு என்ற ராகுலுக்கு அமித் ஷா பதிலடி

0 37809
15 நிமிடத்தில் லடாக் எல்லை பிரச்சனைக்கு தீர்வு என்ற ராகுலுக்கு அமித் ஷா பதிலடி

லடாக் எல்லை பிரச்சனையை 15 நிமிடத்தில் தீர்த்துவிடலாம் என்று கூறிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 1962 சீனப்போரை சுட்டிக்காட்டி அமித் ஷா சுடச்சுட பதில் அளித்துள்ளார்.

15 நிமிடங்களில் பிரச்சனைக்கு  அன்றைய காங்கிரஸ் அரசும், காங்கிரஸ் கட்சியும் தீர்வு கண்டிருந்தால் ஆயிரக்கணக்கான ஹெக்டர் இந்திய நிலப்பரப்பை சீனாவிடம் பறிகொடுக்காமல் காப்பாற்றி இருக்கலாம் என்று  தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அமித் ஷா கூறினார்.

அப்போதைய பிரதமர், அசாமை கைவிட்டுவிடும் எண்ணத்தில் அசாம் பை பை என அகில இந்திய வானொலியில் பேசியதையும் அமித் ஷா சுட்டிக்காட்டினார். ராகுலின் கொள்ளுத்தாத்தா பிரதமராக இருந்த போது இந்திய பகுதிகள் பறிபோயின என்ற அவர், அந்த காங்கிரஸ் கட்சி பாஜக அரசுக்கு பாடம் எடுக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments