கோவையில் இருந்து திருப்பதி சென்ற ஹெலிகாப்டர், பனிமூட்டம் காரணமாக விவசாய நிலத்தில் அவசர அவசரமாக தரையிரக்கம்

0 24463

கோவையில் இருந்து திருப்பதி சென்று கொண்டிருந்த தனியார் ஹெலிகாப்டர் பனிமூட்டம் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் தாதன்குட்டை பகுதியில் அவசர அவசரமாக விவசாய நிலத்தில் தரையிரக்கப்பட்டது.

கோவையை சேர்ந்த நகை கடை அதிபரான சீனிவாசன் குடும்பத்தினர் வாடகை ஹெலிகாப்டரில் அதிகாலையில் திருப்பதிக்கு புறப்பட்டுள்ளனர்.

அப்போது, திருப்பத்தூர் மாவட்டத்தில் கடுமையான பனிமூட்டம் சூழ்ந்ததால், வழி தெரியாமல் பைலட் அவசர அவசரமாக ஹெலிகாப்டரை விவசாய நிலத்தில் தரையிறக்கியுள்ளார்.

அருகில் இருந்த மலைக்குன்று மீது மோதாமல் ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிரக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து அங்கு ஏராளமான மக்கள் ஆச்சரியத்துடன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், திருப்பத்தூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments