சென்னையில் 4 நாட்கள் திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்.. மண்டல வாரியாக கலந்தாலோசனை நடத்துகிறார் ஸ்டாலின்

0 1047
சென்னையில் 4 நாட்கள் திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்.. மண்டல வாரியாக கலந்தாலோசனை நடத்துகிறார் ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 4 நாட்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வருகிற 21, 23, 27, 28 ஆகிய தேதிகளில் மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments