உயிரோடு இருந்த நபரை குளிர்பதன பெட்டியில் வைத்த விவகாரம்-இறப்பதற்கு முன்பே இறப்புச் சான்றிதழ் வழங்கியதாக தனியார் மருத்துவமனையில் விசாரணை

0 3216
உயிரோடு இருந்த நபரை குளிர்பதன பெட்டியில் வைத்த விவகாரம்-இறப்பதற்கு முன்பே இறப்புச் சான்றிதழ் வழங்கியதாக தனியார் மருத்துவமனையில் விசாரணை

சேலத்தில் உயிரோடு இருக்கும்போதே குளிர்பதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், அவர் உயிரிழப்பதற்கு முன்பே தனியார் மருத்துவமனை ஒன்று இறப்புச் சான்றிதழ் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது..

கந்தம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியக்குமார் என்ற 80 வயது முதியவரை உயிரோடு குளிர்பதனப் பெட்டியில் வைத்து, இறப்பை எதிர்பார்த்து அவரின் சகோதரர் குடும்பத்தோடு காந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியிருந்தது. போலீசாரால் மீட்கப்பட்ட முதியவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று அவர் 3 மணி நேரத்தில் இறந்துவிடுவார் எனக் கூறி, முன்கூட்டியே தனியார் மருத்துவமனை அவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments