குடிகார மாடல் கும்பிடு போட்ட பா.ஜ.க பிரமுகர்...! முற்றுகையிட்ட மக்கள்

0 7099
குடிகார மாடல் கும்பிடு போட்ட பா.ஜ.க பிரமுகர்...! முற்றுகையிட்ட மக்கள்

சென்னையில்  நள்ளிரவு நேரத்தில் அதிவேகத்தில் காரை ஓட்டிச்சென்ற விளம்பர நடிகையை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போதையில் சத்தமிட்ட நடிகையை, பா.ஜ.க பிரமுகர் கும்பிடு போட்டு மீட்டுச்சென்ற சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

சென்னையில் கோடம்பாக்கத்தில் இருந்து கார் ஒன்று தாறுமாறாக புறப்பட்டுச் சென்றுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக வடபழனி நோக்கி தாறுமாறாக அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த காரை சில வாகன ஓட்டிகள் ஆற்காடு சாலையில் மடக்கிப் பிடித்தனர்.

ஓட்டுனர் இருக்கையில் இருந்த பெண் குடிபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. தன்னை மடக்கிய பொது மக்களுடன் அந்தப் பெண் ஆங்கிலத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபழனி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கூட்டம் அதிகமானதால் அந்தப் பெண் செல்போனில் யாரையோ அழைக்க, சிறிது நேரத்தில் பாஜக கொடி கட்டிய வாகனம் ஒன்று அங்கு வந்தது. அதிலிருந்து இறங்கிய அரசியல் பிரமுகர் அந்த பெண்ணை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சம்பவ இடத்தைவிட்டு சென்றுவிடலாம் என முயற்சித்தார். ஆனால் அப்பகுதி மக்கள் செல்லவிட வில்லை

போலீசாரின் விசாரணையில் குடிபோதையில் இருக்கும் பெண் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த விளம்பர நடிகை ஆஷா வனிதா என்பதும் பார்ட்டிக்கு சென்று விட்டு போதையில் வாகனம் ஓட்டிய அவரை காப்பாற்ற முயன்றவர் பாஜகவின், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பாலாஜி என்பதும், தெரியவந்தது.

தாறுமாறாக வாகனத்தை இயக்கியதுடன், தங்களை திட்டிய அந்தப் பெண் மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம் என்று பாஜக பிரமுகரின் வாகனத்தை பொதுமக்கள்,முற்றுகையிட்டனர்.போலீசாரும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட பெண்ணை மன்னிப்பு கேட்க கூறினர். அந்த பெண்ணுக்கு பதிலாக பா.ஜ.க பிரமுகர் பாலாஜி கையெடுத்து கும்பிட்டதால் பொதுமக்கள் வழிவிட்டனர்

நடிகை குடி போதையில் இருப்பதை உறுதி செய்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார், கோடம்பாக்கத்தை சேர்ந்த ஜெயா ரோட்சா என்ற வாகன ஓட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய மாடல் அழகி ஆஷா வனிதா மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியது, அதிவேக பயணம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் 7 வருடங்களுக்கு குறைவான தண்டனை உள்ள வழக்கு என்பதால் வழிகாட்டு நடைமுறைபடி ஜாமீனில் விடுவித்தனர். 

அதிர்ஷ்டவசமாக அந்த நடிகையின் காரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments