யோகிக்கு காங்கிரசார் மொட்டை கடுதாசி..! ஸ்டாம்பும் இல்லை..! முகவரியும் இல்லை..!

0 2357
யோகிக்கு காங்கிரசார் மொட்டை கடுதாசி..! ஸ்டாம்பும் இல்லை..! முகவரியும் இல்லை..!

பிரதமர் மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருக்கு கண்டன கடிதம் அனுப்புவதாக போராட்டம் நடத்திய மகிளா காங்கிரசார், தபால்தலை ஒட்டாமல் கடிதங்களை அனுப்பிய சம்பவம் அரங்கேறியது.

நமது அஞ்சல் துறையில் எந்த ஒரு கடிதமும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமனால் அதன் எடைக்கு ஏற்ப தபால் தலை ஒட்டப்பட்டிருக்க வேண்டியது அவசியம். ஆனால் பிரதமர் மோடிக்கும், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆத்திய நாத்துக்கும் கண்டனம் தெரிவித்து சென்னை கே.கே நகரில் மகிளா காங்கிரசார் அனுப்பிய கடிதம் அனுப்பும் போராட்டத்தில் பெரும்பாலான கார்டுகளில் ஸ்டாம்புகள் ஒட்டப்படவில்லை.

மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா, விஜயதாரணி எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்ற போராட்டத்தில் இரண்டு தபால்களில் மட்டுமே கண்டன கார்டை உறைக்குள் வைத்து முறைப்படி 5 ரூபாய் ஸ்டாம்பு ஒட்டி முறையாக அனுப்பி வைத்தனர். மற்ற பெரும்பாலான கண்டன அட்டைகளில் ஸ்டாம்பு இருக்க வேண்டிய இடத்தில் காங்கிரஸ் கட்சியின் கைச் சின்னம் அச்சிடப்பட்டிருந்தது.

இந்தியில் அச்சிடப்பட்டிருந்த அந்த கண்டன அட்டையில் ஊர் பெயருக்கு பதில் தங்கள் பெயரையும், தங்கள் பெயருக்கு பதில் ஊர் பெயரையும் சில தொண்டர்கள் நிரப்பினர்.

போட்டோவுக்கு போஸ் கொடுத்து முடித்ததும் அச்சிடப்பட்ட ஸ்டாம்பு ஒட்டாத கண்டன அட்டைகளை ஒவ்வொரு வரும் உண்டியலில் பணம் போடுவது போல வந்து வரிசையாக போட்டுச்சென்றனர். பலர் அந்த அட்டைகளில் தங்கள் முகவரியை எழுதாமல் மொட்டை கடிதம் போல அனுப்பி வைத்தனர்.

இந்த போராட்டத்தில் தபால் பெட்டிக்குள் போடப்பட்ட தபால் தலை இல்லாத அட்டைகள் அனைத்தும் உரியவரை போய் சேராது என்பதை போராட்டம் நடத்தியவர்களுக்கு உணரவைப்பது யார் ? என்று தபால் ஊழியர்கள் பரிதாபப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments