தீபாவளிக்காக தயாராகும் செட்டிநாட்டு பலகாரங்கள்..!

0 2366

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி காரைக்குடியில் செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாத காலம் மட்டும் உள்ளதால் செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி காரைக்குடி, கோட்டையூர், பள்ளத்தூர், கொத்தமங்கலம், செட்டிநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

5, 7 மற்றும் 9 வரிசை கொண்ட செட்டிநாட்டு தேன்குழல் முறுக்குகள், அதிரசம், மணகோலம், சீடை, தட்டை, கை முறுக்கு, பிரண்டை முறுக்கு, மாவு உருண்டை, காரா பூந்தி, மிக்சர், மைசூர்பாகு உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

பலகாரங்கள் தயாரிக்க செக்கு எண்ணெய் பயன்படுத்துவதால் 3 மாதங்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும் என்று அதனை தயாரிப்பவர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments