மருத்துவ மேற்படிப்புகளில் ஓ.பி.சி மாணவர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

0 709
மருத்துவ மேற்படிப்புகளில், ஓ.பி.சி மாணவர்களுக்கு, நடப்பாண்டில், 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மருத்துவ மேற்படிப்புகளில், ஓ.பி.சி மாணவர்களுக்கு, நடப்பாண்டில், 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில், மருத்துவ மேற்படிப்பில், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க கோரி, தமிழ்நாடு அரசு, அதிமுக, திமுக உள்ளிட்டவை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாவதால் இட ஒதுக்கீடு வழங்கும்பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது நினைவுக்கூறத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments