ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலையான கிளிமாஞ்சாரோவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரம்

0 812
ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலையான கிளிமாஞ்சாரோவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ: தீயை அணைக்கும் பணி தீவிரம்

ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலையான கிளிமாஞ்சாரோவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறை ஈடுபட்டு உள்ளது.

தான்சானியா நாட்டில் உள்ள இந்த மலையில் பலத்த காற்று வீசுவதன் காரணமாக பல மைல்கள் தூரத்திற்கு மிக வேகமாக தீ பரவி வருகிறது.

இதனால், தீயை கட்டுப்படுத்தும் பணி சவாலாக மாறியுள்ளதாக தீயணைப்புத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments