வியட்நாமில் தொடரும் மழையால் பல இடங்களில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தினர் தீவிரம்

0 349
வியட்நாமில் தொடரும் மழையால் பல இடங்களில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தினர் தீவிரம்

வியட்நாமில், மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கன மழையால் துவா தியென் ஹியு மாகாணத்தில் ஏற்பட்ட 2 மண் சரிவுகளில், 30 க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடும் போராட்டத்துக்கு பின், அந்த பகுதியை அடைந்த ராணுவத்தினர், மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

பல சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், மீட்பு குழுவினருக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments