சட்டப் பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம்... இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

0 916
சட்டப் பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம்... இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சட்டப் பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பேரவை செயலாளர், உரிமைக்குழு தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு, தலைமை நீதிபதி  அமர்வில் விசாரணைக்கு வந்தது. முன்னர் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அடிப்படை தவறுகள் களையப்பட்டு திமுக எம்எல்ஏக்கள் 18 பேருக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பேரவை செயலாளர் தரப்பில் வாதிடப்பட்டது.

உரிமை பிரச்சினை என்பது முழுக்க முழுக்க சட்டமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்டது என உரிமைக்குழு தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், மேல்முறையீடு குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments