உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிய விவகாரம்.. ஜெகன்மோகனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

0 1938
உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிய விவகாரம்.. ஜெகன்மோகனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிய விவகாரத்தில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் விளக்கம் கேட்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக ஆந்திர உயர்நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிடுவதாக புகார் கூறி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கில், நீதித்துறைக்கு எதிராக இதுபோல பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு ஜெகன்மோகன் ரெட்டிக்கு தடை விதிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments