மத்தியபிரதேச மாநிலத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

0 959

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த மாநிலத்தின் இந்தூர் நகரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து சிலர் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராஜேந்திரா நகருக்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், 6 பேரை கைது செய்தனர்.

அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 18 செல்போன்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments