தலைவி திரைப்படத்தின் மேலும் ஒரு பகுதியை நடித்து முடித்துவிட்டதாக நடிகை கங்கணா ரணாவத் டுவிட்டரில் வெளியீடு

0 1426
தலைவி திரைப்படத்தின் மேலும் ஒரு பகுதியை நடித்து முடித்துவிட்டதாக நடிகை கங்கணா ரணாவத் டுவிட்டரில் வெளியீடு

தலைவி திரைப்படத்தின் மேலும் ஒரு பகுதியை நடித்து முடித்துவிட்டதாக நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தலைவி என்னும் பெயரில் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. இதில் இந்தி நடிகை கங்கணா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரேநேரத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுப் படப்பிடிப்பு, தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. கொரோனா சூழலில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், 7 மாதங்களுக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு அரங்கம், தான் நடித்த தோற்றம் ஆகிய படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ள கங்கணா ரணாவத், இந்தப் படத்தின் மேலும் ஒரு பகுதியை நடித்து முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் எம்ஜிஆராக நடிக்கும் அரவிந்த் சாமி தனது தோற்றத்தையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments