இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

0 516
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

இஸ்ரேல் நாட்டில் கொரோனா ஊரடங்கு காலத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு நிலவியது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கொரோனாவை சரியாக கையாளவில்லை என்று போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் அரசு வீடுகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது மற்றும் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை தங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments