துரை முருகன் பெயர் மீது ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்..! பொங்கிய எம்.எல்.ஏக்கள்

0 71193
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட பள்ளி நுழைவு வாயிலுக்கு துரைமுருகன் நிதி உதவியில் இருந்து கட்டியதாக வைத்த பெயருக்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து, அவரது பெயரை ஸ்டிக்கர் ஒட்டி மாவட்ட நிர்வாகம் மறைத்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட பள்ளி நுழைவு வாயிலுக்கு துரைமுருகன் நிதி உதவியில் இருந்து கட்டியதாக வைத்த பெயருக்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து, அவரது பெயரை ஸ்டிக்கர் ஒட்டி மாவட்ட நிர்வாகம் மறைத்தது. ஸ்டிக்கரை கிழிக்க உத்தரவிட்ட திமுக எம்.எல்.ஏ நந்த குமார் மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு தைரியம் இருக்கிறதா என்று ஒருமையில் சவால் விட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளி நுழைவு வாயில் கட்டப்பட்டது.

நுழைவாயிலின் முகப்பில் பள்ளியின் பெயரைவிட பெரிய எழுத்தில் "நிதி உதவி துரைமுருகன் எம்.எல்.ஏ" என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் , அரசு நிதியில் கட்டப்பட்டது என்பதை மறைத்து துரைமுருகன் எம்.எல்.ஏ பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் துரைமுருகன் எம்.எல்.ஏ வின் பெயர் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தனர். இதனை திறந்து வைக்க வருகை தந்த எம்.எல்.ஏக்கள் காந்தி, நந்தகுமார் ஆகியோர் துரைமுருகன் எம்.எல்.ஏவின் பெயர் மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை கண்டனர். உடனடியாக திமுகவினரை ஏணியில் ஏற்றிவிட்டு பெயர் மீதுள்ள ஸ்டிக்கரை கிழித்துப்போடச்செய்தனர்.

அதன் பின்னர் அந்த நுழைவாயிலை சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் அவர்கள் திறந்துவைத்தார். அப்போது பேசிய எம்.எல்.ஏ நந்தகுமார் இன்னும் சில மாதங்களில் ஆட்சி மாறும், அப்போது துரைமுருகனின் பெயர் மீது ஸ்டிக்கர் ஒட்டிய அரசு அதிகாரி வீட்டிற்கு போக தயாராக இருக்க வேண்டும் என்று ஒருமையில் பேசியதால் சர்ச்சை எழுந்தது.

தற்போது திமுகவினரால் கிழிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கரை மீண்டும் துரைமுருகன் பெயர் மீது ஒட்டி மறைக்கும் தைரியம் மாவட்ட நிர்வாகத்திற்கு உண்டா? என சவால் விட்டார்.. 

முன்னதாக இந்த நுழைவு வாயில் திறப்பு விழாவுக்கு கையுறை , முககவசம் அணிந்து காரில் வந்த திமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் அவர்களை, கட்சியினர் தொடக்கூடாது என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments