உலக உணவு திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

0 1071
உலக உணவு திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

அமைதிக்கான நோபல் பரிசு, ஐ.நா.சபையின் உணவு வழங்கும் பிரிவான உலக உணவு திட்ட அமைப்புக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மிகவும் உயரிய பரிசாக கருதப்படும் அதனைப் பெறுவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட 211 தனி நபர்களின் பெயர்களும், 107 அமைப்புகளின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன.

அதில் வேர்ல்ட் புட் புரோகிராம் என்ற அமைப்பு, அமைதிக்கான நோபல் பரிசை தட்டிச் சென்றது. பசிப்பிணி போக்குதல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துதல் போன்ற பங்களிப்புக்காக அந்த அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

1961 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட உலக உணவு திட்ட அமைப்பு, ஆண்டுதோறும் சராசரியாக 83 நாடுகளில் 9 கோடி ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments