1949 -ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது... இன்று வரை ஒரு கல் பெயர்ந்தது இல்லை! - தமிழகத்தில் ஒரு அதிசய சாலை

0 146301

பெரிய பெரிய வீடுகள் நிறைந்த நகரம் என்று அழைக்கப்படும் காரைக்குடியில் 1949 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பழம் பெருமை வாய்ந்த சாந்து சாலையை காக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்குடியில் இடையர் தெருவிலிருந்து ரயில் நிலையத்தை இணைக்கும் சாலையை சாந்து சாலை என்று அழைக்கின்றனர். தற்போது, ரயில்வே பீட்டர் ரோடு என்று அழைக்கப்படும் இந்த சாலை கடந்த 1949 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. செட்டி நாடு கட்டுமான கலாசாரத்தின்படி, 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி , பிறகு இறுகிய மணல் போடப்பட்டு கடுக்காய், கருப்பட்டி போன்ற பொருள்களை கலந்து இந்த சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு 71 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், ஒரு சிறிய கல் கூட பெயர்ந்தது இல்லை. , காரைக்குடி வரும் வெளிநாட்டு மக்கள் கூட இந்த சாலையை கண்டு வியந்து போவார்கள். இன்றும் பழுதடையாமலும் வழுவழுவெனவும் இந்த சாலை அமைத்தவர் நல்லையா உடையார் என்பவர் ஆவார்.

தமிழகத்தின் மிகப் பழமையான சாலைகளில் ஒன்றான சாந்து சாலையை காரைக்குடி மக்கள் கண் போல பாதுகாத்து வந்தார்கள். இந்த நிலையில், பாதாள சாக்கடைகள் கட்டும் பணிக்காக சாந்து சாலையை ஒட்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவிது காரைக்குடி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாந்து சாலையை ஒட்டி 20 அடி ஆழத்துக்கு குழி தோண்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டதை கண்டு சமூக நல இயக்கத் தோழர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. காரைக்குடி நகரின் அடையாளமாக பார்க்கப்படும் சாந்து சாலையை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments