கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது கடவுளின் மறைமுக ஆசீர்வாதம் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

0 1295
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது கடவுளின் மறைமுக ஆசீர்வாதம் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

கொரோனாவைப் பற்றி தாம் முழுமையாகப் புரிந்துக் கொள்ள தமக்கு ஒரு ஆசீர்வாதம் போல கொரோனா வைரஸ் பரவியது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்து தமது ஓவல் அலுவலகத்திற்குத் திரும்பிய டிரம்ப் வெளியிட்ட வீடியோவில் இது கடவுளின் மறைமுகமான ஆசி என்றே தான் நான் நினைக்கிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இதனிடையே டிரம்ப்-ஜோபைடன் இடையே இரண்டாவது சுற்று விவாதம் நடைபெற உள்ள நிலையில் டிரம்ப் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமாகாதிருந்தால் விவாதத்தை ரத்து செய்யலாம் என்று ஜோபைடன் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments