மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன ? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய அரசுக்கு உத்தரவு

0 1123
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன ? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய அரசுக்கு உத்தரவு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் எந்தப் பணிகளும் நடைபெறாததால் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரி ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தமிழகத்தோடு அறிவிப்பு வெளியான பிற மாநில மருத்துவமனைகளின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்தும் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments