வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்தியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? - நீதிபதிகள் கேள்வி

0 7648

வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்தி மொழியிலேயே தேர்வு பெற முடியாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெற்று அரசு பணிகளில் அமர்வது எப்படி என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் கடந்த 2015 - ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் உள்ள  ஆயுத தொழிற்சாலையின் கெமிக்கல் பிராசசிங் பிரிவு பணிக்கு விண்ணப்பித்திருந்தார். எழுத்து தேர்வின் அடிப்படையிலேயே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வில் சரவணன் 40 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். ஆனால் அவரை விட குறைவாக மதிப்பெண் பெற்ற 6 பேருக்கு பணி வழங்கப்பட்ட து. சரவணனுக்கு பணி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக சரவணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி காலியாக உள்ள 12 பணியிடங்களில் ஒன்றை சரவணனுக்கு  வழங்க உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.image

அப்போது நீதிபதிகள், " மாநிலங்களில் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் அம்மாநில மக்களுடன் தகவல் தொடர்பு கொள்ளும் வகையில், உள்ளூர் மொழியை நன்கு அறிந்திருக்க வேண்டும்.  இதில், தேவையற்ற அரசியல் உள்ளது. வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்தியிலேயே தேர்ச்சி பெற முடியாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பணிகளில் அமர்வது எப்படி? என தெரியவில்லை. இந்தியாவை சேர்ந்தவர்கள் மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு எழுதி எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரட்டும். ஆனால் தேர்வு முறையில் நேர்மையும், வெளிப்படைத் தன்மையும் தேவை. தேர்வு நடைமுறை நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெறுவது அவசியம்.

தமிழகத்தில் மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். ஆயுத தொழிற்சாலை பணியிடத்திற்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வின் விடைத்தாள்கள், முடிவு வெளியான மூன்று நாட்களுக்குள் அழிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்படுகிறது. நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்ட 178 பேரின் விடைத்தாள்கள் உள்ளனவா அல்லது இல்லையா? மனுதாரர் குறிப்பிடுவது போல் அவை அழிக்கப்பட்டிருந்தால் அதற்கான அவசியமும் தேவையும் என்ன? பணியிடத்திற்கான நியமனம் எதன் அடிப்படையில் நடைபெற்றது? என்பது குறித்து உதகை ஆயுத தொழிற்சாலையின் பொது மேலாளர் பதிலளிக்க வேண்டும்'' என்று கூறினர்.

மேலும், இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments